டான்ஸ் ஆட போனேன்.. டபால்னு விஜய்க்கு முத்தம் கொடுத்து.. முத்தழகு சீரியல் நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
6 June 2024, 6:31 pm
Vijay
Quick Share

90 களின் காலகட்டத்தில் முன்னணி நடன இயக்குனர்கள் பணியாற்றிய படங்களில் டான்சராக நடனமாடிய கலைஞர்களில் ஒருவராக இருந்து தற்போது டாப் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வருபவர் சாந்தி. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்களில் நடனமாடி வந்த சாந்தி சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.

shanthi master

இவர் சமீபத்தில், பிக் பாஸ் ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது, இலக்கியா, சக்திவேல், முத்தழகு உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் பத்ரி படத்தில் நடிகர் விஜய்க்கு கொடுத்த முத்தம் பற்றி பகிர்ந்து உள்ளார். அதில், பத்ரி படத்தில் கிங் ஆப் சென்னை என்ற பாடலில் நடனமாடியது ஜாலியாக இருந்தது என்றும், பிரபுதேவா மாஸ்டராவது டப்புன்னு ஏதாவது சொல்லி ஆட வைப்பார்.

shanthi master

ஆனால், ராஜூ மாஸ்டர் அப்படி சொல்ல மாட்டார், பெண்களிடம் அதிகமாக பேசவே மாட்டார். உயரமாய் யாராவது பெண் இருந்தால், பக்கத்தில் கூட வரமாட்டார். அங்கே போய் நில்லுன்னு சொல்லிவிடுவார். அந்த பாடலில், எனக்கு நிறைய சோலோ கொடுத்து ஆட வைத்தார். அப்படி, ஒரு ஷாட்டில் விஜய் சாருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இருப்பேன். ஐயோ அப்பவே நமக்கு அவர் மீது கிரிஷ் என்பதால் முத்தம் கொடுக்க சொன்னதும் நான் ஓகே என்று சொல்லிவிட்டேன்.

shanthi master

உடனே, ராஜூ மாஸ்டர் பார்த்து விஜய் டக்குனு திரும்பிட போறீங்க உதட்டில் கொடுத்துவிடுவார்கள் என்று கலாய்த்துவிட்டார். அப்போதுதான், அதிகமாக விஜய் சிரித்து பார்த்தேன் என்று மாஸ்டர் சாந்தி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Views: - 94

0

0