லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?
Author: Prasad1 April 2025, 5:49 pm
சூர்யா 45
“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

முதலில் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலக, தற்போது சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
500 டான்சர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ரெடிதான்” பாடலில் 500 டான்சர்கள் நடனமாடினார்கள். அதே போன்ற ஒரு பாடலை ஆர்ஜே பாலாஜி “சூர்யா 45” திரைப்படத்திற்காக உருவாக்கி வருகிறாராம்.
500 டான்சர்கள் கொண்ட இந்த பாடலை வெட்டவெளியில் உச்சி வெயிலில் படமாக்கி வந்தாராம். இந்த நிலையில் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் ஒரு பெண் டான்சர் மயங்கி விழுந்துவிட்டாராம். அந்த டான்சரின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லையாம். இந்த சம்பவம் தகவலாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“சூர்யா 45” திரைப்படம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் கருப்பசாமியை மையமாக வைத்து உருவான கதையம்சத்தில் படமாக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.