கண் தானம் செய்த டேனியல் பாலாஜி.. கண்ணாடி அணிந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல்..!
Author: Vignesh30 March 2024, 1:58 pm
சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களின் மரணம் அதிகரித்து சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதாவது, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளியிட்டு இருந்தால் டானியல் பாலாஜி.
அவர் வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வழியில் மரணம் அடைந்துள்ளார். டேனியல் பாலாஜியின் மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்னைவிட்டு மறைந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினரால் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.