பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணமா?.. சோகத்தில் திரையுலகம்..!

Author: Vignesh
30 March 2024, 10:17 am

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களின் மரணம் அதிகரித்து சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதாவது, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளியிட்டு இருந்தால் டானியல் பாலாஜி.

daniyal balaji

அவர் வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வழியில் மரணம் அடைந்துள்ளார். டேனியல் பாலாஜியின் மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

daniyal balaji

மேலும், நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். எப்படி என்றால், டேனியல் பாலாஜி அம்மாவும் மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள் டேனியல் பாலாஜி சென்னை ஆவடி போலீஸ் செக்க போஸ்ட் அருகே, ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் கோவிலை சொந்தமாக கட்டி இருக்கிறார். வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கமும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…