இறங்கி அடித்த தர்ஷா குப்தா… அதிரடியான ஆட்டத்தை பார்த்து அதிர்ந்துப்போன ஆண்கள்!

Author:
15 October 2024, 4:30 pm

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வருகிறார். இது அவருக்கு முதல் முறை புது அனுபவம் இருந்தாலும் அவர் மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருவதாக பரவலான மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக விளையாடியும் சண்டை சச்சரவு போட்டி என பல விதங்களில் தங்களது விளையாட்டை சுவாரசியமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

darsha gupta

இந்நிலையில் நேற்று பெண்கள் அணியில் இருந்து தர்ஷா குப்தா ஆண்கள் அணிக்க சென்றிருக்கிறார். அதேபோல் ஆண்களிலிருந்து தீபக் பெண்கள் அணிக்கு வந்திருக்கிறார். இந்த இரு அணையினர் உருட்டு டாஸ்க் விளையாடி தங்களின் மளிகை செலவிற்கான பணத்தினை சேகரித்தார்கள். அதில் ஆண்கள் அணியினர் அதிக தொகை சேகரித்தனர் .

இந்த நிலையில் ஆண்கள் அணியிலிருந்து மளிகை பொருட்கள் வாங்க ரஞ்சித், விஜே விஷால் மற்றும் முத்துக்குமரன் சென்றனர். இதில். வி ஜே விஷால் தாங்கள் எடுத்த பொருள் பெரும்பாலானவற்றில் அதிக பொருட்களை எடுத்தார். அதாவது எட்டு சர்க்கரை பாக்கெட் உள்ளது என்றால் 78 பாக்கெட்டில் எடுத்துக்கொண்டு ஒரு சக்கரை பாக்கெட் மீதம் வைத்தார்.

இதன் மூலம் பெண்கள் அணிக்கு போதுமான அளவுக்கு சர்க்கரை கிடையாது. எனவே அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் அவர்களுக்கு ரிஸ்க்கான டாஸ்குகள் கொடுக்கலாம் என திட்டமிட்டார்கள். ஆனால், ஆண்கள் அணியினர் சம்பாதித்த அளவைவிட. அதிக தொகைக்கு பொருட்கள் வாங்கியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் கூறுகிறார்கள்.

அதாவது பிக் பாஸ் விதிப்படி தங்களது கையில் இருக்கும் தொகையை விட அதிக ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் வாங்கிய பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது. அதாவது 500 ரூபாய்க்கு அதிகமாக பொருட்கள் வாங்கி இருந்தால் ஏற்கனவே வாங்கிய பொருட்களிலிருந்து 50 சதவீதம் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது.

அந்த வகையில், இம்முறை ஆண்கள் அணி கிட்டத்தட்ட 4000 ரூபாய்க்கு அதிகமாக பொருட்கள் வாங்கியுள்ளதா பிக் பாஸ் இதை தெரிவித்திருக்கிறார்கள். மேலும், நான் பார்த்து ஏதாவது உங்களுக்கு கொடுக்கிறேன். அதை வைத்து இந்த வாரம் சமைத்துக் கொள்ளுங்கள் என பிக் பாஸ் கூற உடனே தர்ஷா குப்தா தனது வில்லங்க பார்வையை பார்க்க ஆரம்பித்தார்.

darsha gupta

இதையும் படியுங்கள்: இதனால் தான் என் சினிமா வாழ்க்கை முடிந்து போனது – பல வருட உண்மை உடைத்த சங்கீதா!

பெண்கள் அணையில் இருந்து ஆண்கள் அணிக்கு சென்ற தர்ஷா குப்தா ஆண்கள் அணியினரை பார்த்து பிளான் A , பிளான் B என பல பிளான் எல்லாம் போட்டீங்க உள்ள யார் போகணும் அப்படின்னு பிளான் போடலையா? உங்களால நானும் பட்டினி இருக்க வேண்டுமா?என கேள்வி எழுப்பிருக்கலாம்.

இதை பார்த்த பெண்கள் அணியினர் அட வெரி குட்… இப்படித்தான் ஆடனும் என அவரை ஆரவாரம் செய்து வருகிறார்கள். மேலும், பல்வேறு ஆடியன்ஸ் தர்ஷா குப்தாவுக்கு ஆதரவாக இப்படித்தான் விளையாடனும் எப்போதும் அழுது கொண்டே இருக்கக் கூடாது தைரியமா விளையாடுங்கள் களத்தில் இறங்கி என தர்ஷாவின் விளையாட்டு பாராட்டி வருகிறார்கள்.

  • Naga chaitanya Strict Order To Sobhita சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
  • Views: - 255

    0

    0