இயக்குநருடன் டேட்டிங்…? வசமாக சிக்கிய சமந்தா.. வைரலாகும் போட்டோஸ்!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2025, 2:42 pm
சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இந்த ஜோடி விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதையும் படியுங்க : சந்திரமுகி படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்..ஜோதிகாவை சீண்டிய பிரபல நடிகை.!
ஒரு பக்கம் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தாவோ பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
சமந்தாவுக்கு 2வது திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அவரோ எதை பற்றி கவலைப்படாமல் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
பல வதந்திகள் அவரது திருமணம் குறித்து வந்தாலும், அது உண்மையில்லை என பிறகு தெரியவந்தது. இந்த நிலையில் பிரபல இயக்குநருடன் சமந்தா டேட்டிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, சமந்தான தனது இன்ஸ்டா பக்கத்தில் Just a Tease. Or Maybe more என பதிவிட்டு சில போட்டோஸ்களை பகிர்ந்துள்ளார்.
தனது ஆண் நண்பருடன் டின்னர் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்