தலைக்கேரிய போதையில் கொலை முயற்சி.. உச்ச நடிகரின் மகளை காப்பாற்றிய ஒல்லி நடிகர்..!
Author: Vignesh23 October 2023, 4:08 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக சினிமா நடிகர் நடிகைகள் இரவு பார்ட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரவு பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது, ஒரு முறை பார்ட்டியை முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு காரை ஓட்டி சென்று உள்ளார். தலைக்கேறிய போதையில், ஆட்டோக்காரர் ஒருவர் மீது காரை ஏற்றி இருக்கிறார்.
உயிருக்கு போராடிய அந்த ஆட்டோக்காரரை பார்த்த ஐஸ்வர்யா உடனே அப்பாவுக்கு சொல்லாமல் நேரடியாக தனுஷுக்கு கால் செய்திருக்கிறார். தனுஷ் மனைவியை எப்படியோ அனுப்பிவிட்டு அந்த நபரை காப்பாற்றியுள்ளார். போலீசுக்கு தானாகவே கால் செய்து வரவைத்து இந்த இந்த விவகாரத்தை அப்படியே முடித்துள்ளார் தனுஷ். பணத்தால் இப்படியொரு விசயத்தை மறைத்ததாக பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஓப்பன் செய்திருக்கிறார்.