தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!
Author: Selvan22 March 2025, 9:59 pm
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர்
தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள “ராபின் ஹுட்” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: IPL-லின் கோட்…18வருட கிங்..ஷாருகான்புகழாரம்…!
தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் சூடு பிடித்து வருகின்றன.குறிப்பாக,இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சமூக வலைதளங்களில் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி,ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு காரணமாகியுள்ளது.
இந்த பாடல் வெளியான பின்னர்,பல இளம் பெண்கள் ரீல்ஸ் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ராபின் ஹுட் திரைப்படத்தில் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வில்லனாக நடித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும்,இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க டேவிட் வார்னர் 4 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றியடைந்தால் டேவிட் வார்னருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.