காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா..? விவாகரத்துக்கு பின் புலம்பும் பிரபல தொகுப்பாளினி..!
Author: Vignesh14 February 2023, 2:30 pm
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை புடவையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.
சமீபத்தில் டிடி கிளாமர் லுக்கிற்கு மாறிய நிலையில், காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் 15 நிமிடம் கூட தொடர்ந்து நிற்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு DD’s Green Mic என்ற நிகழ்ச்சியில் காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற வீடியோவை மிகவும் உணர்ச்சிரீதியாக பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த வீடியோவில், “நாம என்ன தப்பு செய்தோம், நான் என்ன சொன்னோம், நம் மீது என்ன தப்பு என்று யோசித்தால் தான் நம்மை விட்டு ஏன் அவர்கள் சென்றார்கள் என்று தெரியும்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவாகவும் சிலர் காதலை கிண்டல் செய்தும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.