மீண்டும் இணையும் பாஸ் ஜோடி; கப்பலில் நடக்கும் திகில் திருப்பம்;..

Author: Sudha
7 July 2024, 7:35 pm

சந்தானம் ஆர்யா கூட்டணி எப்போதுமே ஒரு வெற்றிக் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அமோக வெற்றி பெற்றது.

ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் அடுத்த படத்தில் இணைகின்றனர்.மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

சென்ற ஆண்டு சந்தானம் நடிக்க டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய எஸ் பிரேம் ஆனந்த் இந்த படத்தையும் இயக்குகிறார். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகம் இது.

ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி ஒரு தீவில் நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் எனவும் சொல்லியுள்ளார்

திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!