ரெண்டு மூணு LOVE இருந்தால் தப்பு இல்லை.. VJ DD யின் வீடியோவால் வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
Author: Vignesh7 August 2024, 2:33 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலில் DD தான் இருப்பார். அதனால் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்து வந்தது. குறிப்பாக, காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்தார்.
மேலும், இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர். சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து தற்போது சிங்கிளாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அதில், குறிப்பாக ஒருவர் வாழ்க்கையில் இரண்டாவது காதலை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அவர் அதென்ன செகண்ட் லவ், லவ் என்பது இரண்டு முறை தான் வருமா அதெல்லாம் சும்மா சினிமாவில் சொல்வது லவ் வில் கம் அண்ட் கோ இன் யுவர் லைஃப் ஒரே நேரத்தில் நான்கைந்து லவ் வந்தால் தப்பு, வாழ்க்கையில் ரெண்டு மூணு லவ் இருந்தால் தப்பு இல்லை என்று தத்துவம் பேசி டிடி வெளியிட்டு இருந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Achoo🥰🥰🥰 sooo true akka😍♥️ Love you ♥️♥️@DhivyaDharshini pic.twitter.com/kP4O4HLx2N
— Viral Briyani (@Mysteri13472103) May 15, 2021