கேரள சினிமாவில் பாலியல் டார்ச்சர் விவகாரம் பெரும் விஷயமாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது இந்த விவகாரத்தில் பெரிய பிரபலங்கள், முக்கிய பிரபலங்கள் பலர் சிக்கி வருகிறார்கள். இதனால் கேரள சினிமாவே அச்சத்தில் தவித்து வருகிறது .
இப்படியான சமயத்தில் இதன் எதிரொலி தமிழ் சினிமா பக்கமும் கவனத்தை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. கேரளாவைப் போன்றே தமிழ் சினிமாவிலும் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு பாலியல் தொல்லை குறித்த புகார்களை சேகரித்து விசாரிக்கப்படும் என விஷால் பேட்டியில் கூறி இருந்தார்.
இதை அடுத்து சமூக ஆர்வலரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்… தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை கொடுக்காத கண்ணியமான இயக்குனர் எனக் கூறி லிஸ்ட் அவுட் செய்திருக்கிறார். அதில் கடந்த தலைமுறை இயக்குனரான பாரதிராஜா உள்ளிட்டோர் இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் எந்த நடிகையும் ஈடுபடுத்தவே இல்லை. அவர் மிகச்சிறந்த மனிதர்.
அதேபோல் இந்த காலத்தில் இருக்கும் இளம் இயக்குனர்களான மாரி செல்வராஜ், பாண்டிராஜ் , ஏ. எல் விஜய் போன்றோர் மிகச் சிறந்த இயக்குனர்கள். இவர்களால் பாலியல் துன்புறுத்தல் எந்த ஒரு நடிகைக்கும் நடக்கவே இல்லை என நான் உறுதியாக கூறுவேன் என வெளிப்படையாக பேசி புகழாரம் சூட்டியுள்ளார்.