கோடியில் புரளும் தீபிகா படுகோன்… முழு சொத்து மதிப்பு கேட்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Author: Rajesh
5 January 2024, 3:10 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

deepika padukone ranveer singh-updatenewse360

குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தீபிகா படுகோன் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வியக்கப்பிவைத்துள்ளது.

deepika padukone-updatenews360

நடிகை தீபிகா படுகோனிடம் மொத்தம் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் இவர் விளம்பரங்களில் நடிக்க 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பல பிரபலமான பிராண்டிற்கு பார்ட்னராகவும் இருக்கிறார்.

அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பார்க்கிறார். 16 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கினார்.அது தவிர அவர் வசிக்கும் அப்பார்ட்மென்டின் மதிப்பு ரூ. 40 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லாவற்றையும் தாண்டி அவர் கோடி கணக்கில் சொகுசு கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!