பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட தீபிகா படுகோன் – Before & After முகத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Author: Shree11 August 2023, 12:27 pm
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.
2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தோடு இந்தியா முழுவதும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.
அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது. குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.
அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்வதற்கு முன்னர் எப்படி இருந்தார் என்ற புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.