பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் சேர்ந்தார்.

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் 2006 ஆம் ஆண்டில் முதல் முதலாக ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார் . 2007 இல் பாரா கானின் ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை எடுத்து தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் புதிய துவங்கியது. தொடர்ந்து பாலிவுட்டில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தீபிகா படுகோன் தற்போது நம்பர் ஒன் நடிகை என தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் தீபிகா படுகோன். முன்னதாக அவர் ரன்பீர் கபூரை காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார்.

அதன் பிறகு தற்போது ரன்வீர் சிங்குடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் இந்நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் பிரக்னன்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.