கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்? பேட்டியில் பட்டுன்னு போட்டு உடைச்சிட்டாங்கப்பா!

Author: Rajesh
20 February 2024, 6:54 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் வோக் சிங்கப்பூருடன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த தீபிகா படுகோனிடம், ‘நீங்கள் எதிர்நோக்கும் ஒன்று’ என்று கேட்டதற்கு, ஆம்! “நிச்சயமாக. ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளை எதிர்நோக்குகிறோம்” அதற்கு முன்னர் எங்கள் குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்க நினைக்கிறோம்.

deepika padukone

எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு பெரிய செலிபிரிட்டியின் குழந்தை என்ற எண்ணம் வராமல் பார்த்துக்கொள்வோம் . சினிமா தொழிலில், புகழ் மற்றும் பணத்தை எடுத்துச் செல்லப்படுவது எளிது. ஆனால், வீட்டில் என்னை யாரும் பிரபலமாக நடத்துவதில்லை. முதலில் நான் ஒரு மகள், ஒரு சகோதரி. அது மாறுவதை நான் விரும்பவில்லை. அந்த விஷயத்தில் என் குடும்பம் என்னை அடித்தளமாக வைத்திருக்கிறது. எனவே ரன்வீரும் நானும் எங்கள் குழந்தைகளிடமும் அதே எண்ணம் வரும்படி வளர்ப்போம் என்று நம்புகிறோம் என்றார். தீபிகா படுகோன் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இவ்வளவு விழிப்புடன் இருப்பதை பார்த்தால் அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?