ரன்வீரை காதலிக்கும் போதே ரெண்டு பேர் கூட டேட்டிங் போனேன்.. தீபிகா தடாலடி : கணவர் பதிலடி!

Author: Vignesh
27 October 2023, 6:15 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது ரகசியங்களை கூறி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

ranveer-singh-

அதில், நடிகை தீபிகா, ரன்வீர் சிங்கை காதலிக்க துவங்கிய சமயத்தில் வேறுசில ஆண்களை சந்தித்து டேட் செய்ததாகவும், சிங்கிளாக இருந்தபோது எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டிய ஆசை இருந்ததாகவும், தன் வாழ்க்கையில் ரன்வீர் சிங் வந்தப்பின் எத்தனை ஆண்களை சந்தித்தாலும் மீண்டும் ரன்வீரை தான் தேடி சென்றதாகவும் கூறியிருந்தார்.

ranveer-singh-

அதற்கு ரன்வீர் சிங், தனக்கு அந்த இருவர் யார் என்று நன்றாகவே தெரியும், நினைவில் இருப்பதாக முறைத்தபடி தெரிவித்துருக்கிறார். அதற்கு தீபிகா, நாம் இதைப்பற்றி பிறகு பேசலாம் என்று சிரித்தபடி சமாதானம் செய்தது இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி விரைவில் விவாகரத்து உறுதி என்று கூறி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 526

    0

    0