மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை ராயல் சல்யூட்.. ஏன் தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan11 November 2024, 2:41 pm
வயது மூப்பு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தூங்கும் போதே உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் அஞ்சலி
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இவர் இறந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், செந்தில், சார்லி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
விமானப்படை மரியாதை
இந்த நிலையில் டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் தேசத்தின் மூவர்ண கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அதன் பிறகு திரைப் பயணத்தை துவங்கினார்.
சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சமார் 400 படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் முத்திரை பதித்தார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
டெல்லி கணேஷ் உடல் தகனம்
டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது ஏன் என்றால், அவர் 10 வருடமாக விமானப்படையில் பணியாற்றியதின் அப்படையில் மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராமாபுரத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து சென்று டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.