ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு! 2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?
Author: Prasad25 April 2025, 4:07 pm
இசைப்புயலுக்கு வந்த சோதனை
ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும் ஏற்றார் போல் தனது பாடல்களை அப்டேட் செய்துகொண்டே வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே”, “வாட்டர் பாக்கெட்”, “ஜிங்குச்சா” போன்ற பாடல்களின் மூலம் Gen Z தலைமுறையையும் தனது இசையால் குதூகலப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இந்த நிலையில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு காப்புரிமை வழக்கு தற்போது பாய்ந்துள்ளது.

இது எங்க பாடல்…
2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் நல்ல வசூலை குவித்திருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “வீரா ராஜ வீரா” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலால்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இப்பாடல் சிவா ஸ்துதி என்ற பாடலை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகவும் இதனை தங்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.