மீண்டும் பயமுறுத்த வரும் போர்ச்சுகீசிய பேய்; ஆகஸ்டில் இன்னும் ஆக்ரோஷமாக

Author: Sudha
4 July 2024, 10:49 am

சென்னையில் உள்ள டிமான்டி காலனி ஒரு பயமுறுத்தும் வரலாற்றைக் கொண்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த போர்ச்சுகீசிய மனிதரின் நினைவாக இந்த காலனிக்கு பெயரிடப்பட்டது டிமான்டி ஒரு போர்ச்சுகீசிய வணிகர் அவர் நிலத்தை கையகப்படுத்தி தனது குடும்பம் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளுக்காக ஒரு காலனியை உருவாக்கினார். பல்வேறு கதைகள் அவரைப் பற்றி சொல்லப்படுகிறது.

டிமான்டி குடும்பம் சோகமான முடிவை தேடிக் கொண்டதாக கதைகள் சொல்லப்போடுகிறது. அவருடைய மகள் தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டதாக ஒரு கதையும் டிமான்டி சூனியம் செய்ததாக மற்றொரு கதையும் அங்கு வாழும் மக்களால் சொல்லப்படுகிறது.

டிமான்டி காலணியை குறித்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது ஹாரர் மூவிஸ் வரிசையில இந்த திரைப்படம் முக்கிய இடம் பிடித்தது.விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இதனுடைய இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. டிமான்ட்டி காலனி 2 இன் ட்ரெய்லர் 2023 டிசம்பரில் வெளியிடப்பட்டது.

திரைப்படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில் டிமாண்டெட் காலனி இரண்டாம் பாகமானது வருகிற ஆகஸ்ட் மாதம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார் இந்த திரைப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி முத்துக்குமார், அருண்பாண்டியன் போன்றோர் நடித்துள்ளனர்.வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 220

    0

    0