“என் பாடலுக்கு மதிப்பு தரவேண்டும்”-தேவாவின் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் தேவாவின் இசைக்கு எப்பவும் தனி மவுசு உண்டு.அந்த அளவிற்கு தன்னுடைய காந்த குரலால் ஏகப்பட்ட பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர்.
இன்னமும் ரஜினி திரைப்படத்தின் போது வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைட்டில் மியூசிக் இவர் பேரை சொல்லிக்கொண்டிருக்கிறது.அண்ணாமலை,பாட்ஷா,அவ்வை சண்முகி போன்ற பல படங்களுக்கு ஹீரோக்களுக்கு என்ட்ரி சாங் கொடுத்து தனது இசையால் ரசிகர்களை புல்லரிக்க வைத்தவர்.
இதையும் படியுங்க: நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
இந்த நிலையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
அதாவது ஒரு இசை நிகழ்ச்சிக்காக பாட்டு லிஸ்ட் அனுப்பிய போது,ஒருவர் போன் செய்து தேவா சார் உங்க பாட்டு மட்டும் போதும்..ஏன் மற்ற பாடகர் பாடல்களை எடுத்து இருக்கீங்க என்று கேட்டுள்ளார்.அதற்கு தேவா அதெல்லாம் என் பாட்டு தான்,நான் தான் இசையமைத்து பாடி இருக்கேன் என்று சொல்லும் போது,அவர் கடைசி வர நம்பவே இல்லையா…இதனால் மனம் உடைந்து,இந்த பாட்டுக்காக நாம செய்த உழைப்பு எல்லாம் வீணா போய்விட்டதே என்று நினைத்துள்ளார்.
இசையமைப்பாளரின் உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் தேவா கூறி இருப்பார்.