COPY RIGHTS தேவையில்ல.. இதுமட்டும் போதும் : இளையராஜாவை நோஸ்கட் செய்த தேவா!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 9:02 am
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு தனியிடம் உண்டு. மெலடி பாடல்களில் மெய்மறக்க செய்யும் தேவாவின் இசை 2K கிட்ஸ் வரை சென்றடைந்துள்ளது.
இதையும் படியுங்க : 10 நாள் கூட ஆகல… பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் விடாமுயற்சி..!!
கானா பாடல்களை சினிமாவில் புகுத்திய பெருமையும் தேவாவையே சாரும். இவரது படங்களில் ஒரு கானா பாடலாவது நிச்சயம் இடம்பெறும்.
இளையராஜாவுக்கு நோஸ்கட் கொடுத்த தேவா
மனதை வருடும் பாடல்களை கொடுத்ததால் தேனிசை தென்றல் என்ற அடைமொழி இவருக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் Introக்கு இசையமைத்ததும் இவருதான்.
எத்தனையோ இசைக்கலைஞர்கள் தங்களது பாடலுக்கு Copy rights கேட்டு வரும் நிலையில், குறித்து தேவா பேசியது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Deva Sir ❤️🎶✨👏 pic.twitter.com/AHdzD2rl7d
— OTT Trackers (@OTT_Trackers) February 8, 2025
சமீபத்திய பேட்டியில் பேசிய தேவா, என்னுடைய பாட்டுக்கு நான் copy rights கேட்க மாட்டேன். எனக்கு பணம் முக்கியமல்ல. புகழ் இருந்தால் போதும். என் பாட்டை தற்போதுள்ள குழந்தைகள், 2K கிட்ஸ் வரை ரசிக்கின்றனர். எனக்கு அதுவே போதும் என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மறைமுகமாக இளையராஜாவை தாக்கி பேசுகிறார் என்றும், தேவாவின் இந்த செயலுக்கு சல்யூட அடிக்கலாம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.