காலைல 5 மணிக்கு அதை செஞ்சு டார்ச்சர் பண்றா.. தேவயானியின் சீக்ரெட்டை வெளியிட்ட கணவர்..!

Author: Vignesh
18 January 2024, 5:46 pm

சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

Devayani - Updatenews360

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

rajakumaran- -updatenews360

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கோலங்கள் என்ற தொடரில் நடிக்க மிகப்பெரிய பிரபலத்தை அவருக்கு கொடுத்தது.

devayani - Aupdatenews360AC

விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கியபோது, அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது அதிக காதல் ஏற்பட்டதாகவும், ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம் என தேவயாணி தெரிவித்து உள்ளார்.

devayani-updatenews360

இந்நிலையில், தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், இட்லி மிஞ்சி போனால் உப்புமா செய்வார்கள், அந்த காலத்து பெண்கள். ஆனால், காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு இட்லி சுட்டு அதை ஆறவைத்து உப்புமா செய்து புருஷனுக்கு 12 மணிக்கு கொடுக்கிறாங்க… உப்புமா மகளுக்கு பிடிக்கும், 11 மணிக்கு உப்புமாவை நான் சாப்பிட்டேன். மீண்டும், 1 மணிக்கு சாப்பிடலாமா என்று கேட்பார்கள் என்று ராஜகுமாரன் தேவயானியின் உப்புமா பற்றிய ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இவங்க சூடான இட்லியில் கூட உப்புமா செய்ய கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்று தேவயானி குறித்து காமெடியாக பேசி உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி