பிரபல காமெடி நடிகருடன் தேவயானிக்கு இப்படி ஒரு உறவா?..- ரகசிய திருமணம் செய்து கொண்ட சம்பவம்..!

Author: Vignesh
9 June 2023, 3:45 pm

காமெடி நடிகரான சிங்கமுத்துக்கும் தேவயானிக்கும் இருந்த ரகசிய உறவு குறித்து தனியார் youtube சேனலுக்கு செய்யார் பாலு கூறி இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழ் திரையுலகை பொருத்தவரை பல பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குள் ஒரு இணைப்பில் இருப்பதை நாம் காணலாம்.

  devayani-updatenews360

இந்நிலையில், பிரபு சத்யராஜ் இணைந்து நடித்த சிவசக்தி என்ற படத்தில் குட்டை பாவாடையுடன் ஒரு பாடலுக்கு கும்தாவாக கவர்ச்சி நடனமாடி தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தேவயானி. இவர் தொட்டா சிணுங்கி படத்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்தவர் என்று சொல்லலாம். அந்தப் படத்தின் மூலமாக தனது கேரியரை மிகவும் வலுவாக்கிய தேவயானி காதல் கோட்டை, சூரிய வம்சம் போன்ற கச்சிதமான படங்களை தேர்ந்தெடுத்து ஜொலிக்கும் நடிகையாக வலம் வந்தார்.

devayani-updatenews360

முன்னணி நடிகையாக இருந்த தேவயானி அந்த காலகட்டத்தில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது போல ராஜகுமாரனை இவர் திருமணம் செய்து கொண்டார் என்று பிரபல பத்திரிகைகளில் அப்போது செய்திகள் வெளி வந்தது.

devayani-updatenews360

முன்னதாக ராஜகுமாரன் சூரியவம்சம் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் நடவடிக்கைகள் பிடித்து போக இருவரும் காதலிக்க ஆரம்பித்து வீட்டின் கடும் எதிர்ப்பை மீறி கிட்டத்தட்ட சினிமா பானியிலேயே திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

devayani-updatenews360

இவர்களின் காதல் விஷயம் தெரிந்த தேவயானியின் தாய் இவரை வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும், பல தடைகளை மீறியும் கடும் எதிர்ப்பைத் தாண்டியும் சுவர் ஏறி குதித்தும் இவரது திருமணம் திருத்தணியில் வைத்து நடைபெற்றதாக இயக்குனர் ராஜகுமாரன் முன்னதாக பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

vadivelu- updatenews360

அப்போது இவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டது வேறு யாரும் இல்லை நடிகர் சிங்கமுத்து தான். மேலும் ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டது சிங்கமுத்து தானாம்.

devayani-updatenews360
  • Coolie box office predictions ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!
  • Close menu