இயக்குனரான நடிகை தேவயானி : விருது வாங்கி அசத்தல்…குவியும் வாழ்த்துக்கள்..!
Author: Selvan20 January 2025, 7:03 pm
விருது வாங்கிய கை குட்டை ராணி குறும்படம்
தமிழ் சினிமாவில் 90’S கால கட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மதிப்பிற்குரிய நடிகையாக இருந்து வருபவர் தேவயானி.
இவர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் முதன்முதலாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான “கைக்குட்டை ராணி”ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வாங்கியுள்ளது.
இதையும் படியுங்க: வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!
சுமார் இருபது நிமிடங்கள் கொண்ட இப்படத்தில் தாயை இழந்து,வெளியூரில் பணிபுரியும் தந்தைக்கு நடுவே ஒரு பெண் குழந்தை எந்தவிதமான சிக்கல்கல்களை சந்தித்து வருகிறார் என்பதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக காட்டியுள்ளது.ஜெய்ப்பூரில்நடைபெற்ற 17வது சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை தேவயானி வாங்கினார்.
விருது வாங்கிய பிறகு தேவயானி அளித்த பேட்டியில்,இதுவரைக்கும் எவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும்,நான் இயக்கிய இந்த குறும்படம் விருது வாங்கி இருப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.இப்படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.