சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தேவயானி அஜித்துடன் நடித்து மெகா ஹிட் அடித்த திரைப்படமான காதல் கோட்டை படத்தின் ஸ்வாரஸ்யமான சில அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் கூறினார். நான் சினிமாவில் நிறைய தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோயிருந்த சமயம் அது. இதோடு சினிமா வாழ்க்கையையே மூட்டைகட்டிவிடலாம் என நினைத்துவிட்டேன். அப்போது தான் காதல் கோட்டை படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. பின்னர் இந்த ஒரு படத்தில் நடித்து என்ன ரிசல்ட் வருது என பார்க்கலாம் என நினைச்சேன்.
அதற்காக கடுமையாக உழைத்தேன். நிறைய நேரங்களில் தூக்கம் கூட வராமல் பயத்துடன் இருந்துள்ளேன். இப்படத்தில் பெரும்பாலும் பார்க்காமலே காதல் என்பதால் அஜித்திற்கும் எனக்கும் பெரிய அளவில் சந்திப்பு இருந்ததில்லை. இதனால் நான் என்னுடைய பங்கை சிறப்பாக செய்யவேண்டும் என எண்ணி நடித்தேன். அதன் பிறகு அந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. எனவே அஜித்தின் காதல் கோட்டைதான் தன் சினிமா பயணத்தை தீரிமானித்தது. அதன் பிறகு மளமளவென என வழப்புகள் குவிய ஆரம்பித்தது என அவர் கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.