சிம்பு கூட அதை பண்ணியே ஆகணும்.. அடம்பிடிக்கும் நடிகை தேவயானி..!
Author: Vignesh9 January 2024, 5:05 pm
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.
இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை தேவயானி சர்மா. இவர் சமீபத்தில், ரசிகர் உடன் கலந்துரையாடிய போது தெலுங்கு படத்தில் நடித்தது போல எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வாழ்வில் என்னுடைய லட்சியம் என்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான முயற்சிகளில் நான் இறங்கி இருக்கிறேன். அதற்கான வேலையும் தொடங்கிவிட்டது என்று தேவயானி சர்மா தெரிவித்துள்ளார்.