தேவயானியின் பண்ணை வீட்டில் இப்படி ஒரு வசதியா? Switch போட்டா வீட்டுக்குள் மழை வருமாம்!

Author: Rajesh
25 February 2024, 6:30 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகையான தேவயானி வெகு சீக்கிரத்தில் ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். குறிப்பாக சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் தேவயானி அண்மை காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட தனது இரண்டு மகள்கள் , கணவர் என குடும்பத்தோடு கலந்துக்கொண்ட நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தேவயானியின் வீட்டில் உள்ள விசித்திர வசதி குறித்த தகவல் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்த தேவயானி. அங்கேயே தனக்கு பிடித்தது போன்று பார்த்து பார்த்து அழகான வீடு ஒன்றை கட்டியுள்ளார். செடி, கோடிகளுக்கு மத்தியில் அந்த பிரம்மாண்ட பண்ணை வீடு பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். கோடை விடுமுறை நாட்கள், பண்டிகை, விஷேஷ நாட்களில் மட்டும் குடும்பத்தோடு அந்த வீட்டிற்கு சென்று வரும் தேவயானி அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாராம். இந்த வீட்டில் மொத்தம் 5 பெட் ரூம்கள், ஹால், பூஜை அறை என சகலமும் உண்டு.

அதுமட்டும் மட்டும் அல்லாமல் அந்த வீட்டில் வெயில் காலத்திலும் சுவிட்ச் போட்டால் மழை பெய்யும் அளவிற்கு பண்ணை வீட்டுக்கு நடுவில் செயற்கையாக மழை பெய்யும் பைப்புகள் செட்டப் செய்திருப்பது வியக்க வைக்கிறது. மதிய வேளையில் வீட்டில் அதிக வெயில் அடிக்கும் போது ஜாலியாக மழையை போட்டு குளிர்ந்த காற்று வாங்கி குடும்பத்துடன் கொண்டாடுவோம் என ஆனந்தத்தோடு கூறுகிறார் தேவயானியின் கணவர் ராஜகுமாரன்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?