கமல் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த மாதிரி காட்சி..!! தெறித்து ஓடிய பிரபல சீரியல் நடிகை..!
Author: Vignesh13 January 2023, 7:00 pm
தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தே தீர வேண்டும் என்று பல நடிகைகள் ஆசையாய் வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். ஆனால் ஒருசில நடிகர்கள் என்றாலே தெறித்து ஓடும் அளவிற்கு அவர்களுடன் நடிக்க தயங்குவார்கள்.
அப்படி ஒரு காலகட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் படம் என்றால் ஓடும் நடிகைகள் சிலர் இருந்துள்ளனர். ஏனென்றால் கமல் படம் என்றாலே நெருக்கமாக மற்றும் பலான காட்சிகள் இடம் பெறும் என்பதாலே தான்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தேவி பிரியா அப்படி கமலுடன் நடிக்கும் வாய்ப்பினை அதுவும் விலைமாது ரோலில் நடிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆக இருந்து வரும் தேவி பிரியா சமீபத்திய பேட்டியில் மகாநதி படத்தில் கமல் ஹாசனின் இரண்டாம் மகள் கதாபாத்திரத்தில் இயக்குனர் சந்தான பாரதி கேட்டார்.
ஆனால் விலைமாது ரோல் என்பதால் நடிக்க முடியாது என்று விட்டுவிட்டேன் என்றும் அதன்பின் படம் பெரிய ஹிட் கொடுத்தப்பின் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நடிகை தேவி பிரியா வெள்ளித்திரையில் வாய்ப்புகள் இருந்து வரவேற்பு பெறாமல் சின்னத்திரை சீரியல்களில் வில்லியாகவும் டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.