எங்களுக்கு பழைய முகம்தான் வேணும்… ஆளே மாறிய தேவி ஸ்ரீ பிரசாத்.. அநியாய கவலையில் ரசிகர்கள்..!

Author: Vignesh
14 March 2024, 2:53 pm

தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் எனவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் இசையமைத்து வெளியான புஷ்பா பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவரது இசையமைப்பில் சூர்யாவின் 42வது படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், விஷால் நடித்து வரும் ரத்தினம் ஆகிய படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். தனது வாழ்க்கையில், நடக்கும் சில சந்தோஷமான விஷயங்களை எப்போதும் instaவில் பதிவிடும் தேவி ஸ்ரீ பிரசாத். ஒரு சூப்பரான பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றுள்ளார்.

devi sri prasad

அப்போது, இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பதிவிட்டு என் வாழ்நாள் கனவு நனவானது என ஒரு பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், எனது மிகப்பெரிய வாழ்நாள் கனவாக ஒரு நாள் இளையராஜா எனது ஸ்டுடியோக்குள் வரவேண்டும் என்பது இருந்தது. அப்போது, அவரது புகைப்படத்திற்கு அருகில் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும். நியாயமான ஆசைகள் நிறைவேற இந்த பிரபஞ்சம் எப்போதும் வழிவிடும்.

devi sri prasad

அதன்படி, இறுதியாக என் ஆசை நிறைவேறியுள்ளது என பதிவு செய்துள்ளார். அதில், அவரை கண்ட ரசிகர்கள் ஆளே மாறி இருக்கிறாரே நல்லா தானே இருக்கீங்க உங்களுக்கு என்ன ஆனது என்று அவருடைய நியூ கெட் அப் குறித்து பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 189

    0

    0