விருது விழாவில் உதவியாளரை மோசமாக நடத்திய பிரபல இசையமைப்பாளர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Author: Rajesh
9 April 2023, 11:38 am

தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் எனவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் இசையமைத்து வெளியான புஷ்பா பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவரது இசையமைப்பில் சூர்யாவின் 42வது படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் டிஎஸ்பி பங்கேற்று இருக்கிறார். அந்த விழாவில் அவருக்கு விருதும் கிடைத்துள்ளது. அந்த விருதுடன் புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் கேட்க அதற்கு உடனே அவர் தனது உதவியாளரை அழைத்து உடையை சரி செய்ய சொல்லி உள்ளார்.

அவர் டிஎஸ்பி-யின் காலில் அவருடைய துணி மடிப்பை எடுத்துவிட்டு, ஷூவை எல்லாம் துடைக்க சொல்லியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாக திட்டி வருகின்றனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!