நாக்கு புடுங்குற மாதிரி ஒரே ஒரு கேள்வி கேட்ட தேவயானி…. நடிகர் சங்கம் கப் சிப்!

Author: Rajesh
20 January 2024, 6:44 pm

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர்களை தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் அவர் விருப்பத்தின் படியே மக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சரத்குமார் , சத்யராஜ், விஷால், நடிகை தேவயானி , உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு பேசினார்கள். அப்போது பேசிய நடிகை தேவயானி, மறைந்த நடிகர் விஜயகாந்த் மிகச்சிறந்த பதவி பொறுப்பாளர். ஆம், விஜயகாந்த் தலைவராக இருக்கும்போதுதான் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினரானேன். அவரே அழைத்து எனக்கு அந்த பொறுப்பை கொடுத்தார். அது இன்னும் நியாபகம் உள்ளது.

விஜயகாந்த் தலைவராக இருந்தபோது யாரும் முடிவெடுக்க முடியாத பல துணிச்சலான செயல்களை தைரியமாக இறங்கி செய்துள்ளார். ஆம், அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது தான் மதுரையில் கார்கில் போருக்காக நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்தினோம். அது அவரால் தான் நடந்தது. அதன்பிறகு சிங்கப்பூரில் ஒரு கலைவிழா நடத்தினார். அதுவும் அவரால் தான் முடிந்தது. அதன்பிறகு அப்படி ஒரு நிகழ்ச்சியை நடிகர் சங்கத்தால் நடத்த முடிந்ததா? என்ற கேள்வி நறுக்குன்னு கேட்க அங்கிருந்த அத்தனை நடிகர்களும் கப் சிப்னு ஆகிவிட்டார்கள்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?