12ம் வகுப்பு தேர்வு எழுதிய தேவயானியின் மகள்… இவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளாரா? குவியும் வாழ்த்துக்கள்!

Author: Shree
9 May 2023, 2:05 pm

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

devyani - update news 360

இந்நிலையில் தேவயானி மூத்த மகள் இனியா இந்த வருடம்12 தேர்வு எழுதியிருக்கிறார். நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் 600க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருந்தாலும் உறுதிப்படுத்தாத இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதையடுத்து இனியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 795

    6

    0