நேத்து ஜிபி முத்து.. இன்னைக்கு.. ஜனனி எடுத்த முடிவால் வீட்டிற்கு வெளியே சென்ற தனலட்சுமி..!
Author: Vignesh14 October 2022, 12:15 pm
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்றில் இருந்து ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வரும் நிலையில், வாக்குவாதத்தில் இருவரும் மாற்றி மாற்றி ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று ஆயீஷாவை பாத்திரம் கழுவும் அணியின் கேட்பான் ஜனனி தனது அணியில் இருந்து ஜி.பி. முத்துவிற்கு பதிலாக ஸ்வாப் செய்துகொண்டார்.
இதனால், ஜி.பி.முத்து வீட்டிற்கு வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் நேற்று இரவு முழுவதும் உறங்கினார்.

இந்நிலையில், இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் ஜி.பி.முத்துவை தனலட்சுமிக்கு பதிலாக ஜனனி ஸ்வாப் செய்துகொண்டுள்ளார்.
இதன்முலம் வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலைமை தனலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியாக அமர்ந்து தனலட்சுமி அழுகிறார்.
இதோ அந்த ப்ரோமோ..