நிறைய அவமானப்பட்டுட்டேன்.. அதை மட்டும் பண்ணிருங்க.. உருக்கமாக பேசிய தனுஷ்..!

Author: Vignesh
11 October 2023, 1:30 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். தனுஷ் ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி குடிபெயர்ந்தார்.

இதனிடையே, கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை தனுஷ் கலக்கி வருகிறார். தற்போது, கேப்டன் மில்லிர் என்ற படத்தில் நடித்தும் வருகிறார். தொடர்ந்து தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்தும் வருகிறார். பிக் பாஸ் மூலம் அடிப்படை கல்வி குறித்த சர்ச்சை பேசு பொருளாகியது.

இதனிடையே, படிப்பின் முக்கியத்துவம் குறித்து தனுஷ் பேசிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், படங்களில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருப்பார்கள் ஆனால், நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ எனவும், நன்கு படியுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதாவது, ரசிகர்களுக்கு பல பேட்டிகளில் ஒரு டிகிரியாவது படிச்சுடுங்க என அட்வைஸ் செய்துள்ளார். தனுஷ் தனது படங்கள் மூலம் கல்வி அவசியத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 435

    0

    0