ராஜாவாக நடிக்கும் தனுஷ்.. அதிரடியாக தயாராகும் இளையராஜாவின் Biopic – செம ப்ளான் போட்டிருக்கும் பாலிவுட் இயக்குநர்..!
Author: Vignesh3 August 2023, 4:00 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.
சமீபகாலமாக இளையராஜா பயோப்பிக்கின் எழுத்து பணி நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குனர் பால்கி, அவரின் பயோப்பிக்கில் பிரபல நடிகர் தனுஷை வைத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தனுஷும் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இதற்கு ஓகே சொல்லுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.