அடுத்தடுத்து ரஜினி குடும்பத்தை வெறுப்பேற்றிய தனுஷ்… அதிரடி முடிவை எடுத்த ஐஸ்வர்யா…!!
Author: Babu Lakshmanan21 March 2022, 6:26 pm
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். திரைத்துறையில் தந்தை ரஜினியும், கணவன் தனுஷும் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஐஸ்வர்யாவும் தனது பங்கிற்கு இயக்கநராக அவதாரம் எடுத்து வந்தார்.
2012-ல் கணவன் தனுஷை வைத்து 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இதைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையான ரஜினியும் ஆடிப்போய் விட்டார். இதையடுத்து, தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினி மிகவும் நொந்து போனதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது கவனத்தை திருப்ப, மியூசிக் வீடியோ இயக்குவதில் நாட்டம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழில் இதற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.
மகளின் மனமுறிவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, இந்த ஆல்பத்தை ரஜினிகாந்தே வெளியிட்டார். இந்தப் பாடல் வெளியீட்டிற்கு ஐஸ்வர்யாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கணவர் தனுஷும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அவரது இந்த வாழ்த்து ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காரணம், அவர் வாழ்த்திய விதம்தான். எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்து விடலாம் என்ற முடிவில் இருவீட்டாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதை அனைத்தையும், தவிடு பொடியாக்கினார் தனுஷ். ஆல்பத்தை வெளியிட்ட ஐஸ்வர்யாவை, தோழி எனக் குறிப்பிட்டே அவர் வாழ்த்திப் பதிவிட்டிருந்தார். இதன்மூலம், ஐஸ்வர்யாவுடன் இணையும் எண்ணம் துளியும் இல்லை என்று தனுஷ் மறைமுக சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது.
அதோடு, மட்டுமல்லாமல், அண்மையில் நடந்த இளையராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், தாலாட்டு பாடல் ஒன்றை பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு தனது இரு மகன்களையும் அழைத்து சென்ற தனுஷ், குழந்தைகளை இனி நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் வகையில் அந்த தாலாட்டு பாடல் இருந்தது. இது ரஜினி குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இயக்குநர் உள்பட பல்வேறு அவதாரங்களை மேற்கொண்ட ஐஸ்வர்யாவுக்கு இது ஒன்றும் புரியாமல் இல்லை. இதையடுத்து, தனுஷுக்காக இனி காத்திருப்பது வீண் என்பதை அவரும் தெரிந்து கொண்டார் போலும். இதனால், அவரும் தனுஷை விட்டு விலக முடிவு செய்தார்.
3 மாதங்களுக்கு முன்பே இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், ஐஸ்வர்யா தனது டுவிட்டர் உள்பட சமூக வலைதளப்பக்கங்களில் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தனுஷின் ஒவ்வொரு செயல்களும் அவரைக் காயப்படுத்தியதாக உணர்ந்த ஐஸ்வர்யா, தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து தனுஷ் பெயரை நீக்கி விட்டார். மேலும், தனது பெயருக்கு பின்னர், தனது தந்தையின் பெயரை சேர்த்துக் கொண்டார்.
இதன்மூலம், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக அவர்களின் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.