நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உலகம் முழுவதும் சுமார் 4000 அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
முன்னதாக படத்தின் ட்ரைலர், பாடல் , ப்ரோமோ காட்சி என ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததோடு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. குறிப்பாக ரஜினி வயசானாலும் ஸ்டைலும் , அழகும் மாறாமல் இன்னும் அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் படம் எப்படி இருக்கு என ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நீங்கள் பார்த்து சொல்லுங்கள் என செம கூலாக பதிலளித்துவிட்டு இமயமலைக்கு ட்ரிப் அடித்துவிட்டார்.
இங்கு தியேட்டர்கள் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. படம் நிச்சயம் சூப்பராக இருக்கும் என படம் பார்க்க குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர். வெளியான அனைத்து அப்டேட்களும் ரசிக்கும்படியாகவே இருப்பதால், ஜெயிலர் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் முன் பதிவில் மட்டும் ஜெயிலர் படம் பல கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே படம் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பல நட்சத்திரங்கள் படத்தை பார்த்து வரும் நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா ரோகினி திரையரங்கிற்கு ஜெய்லர் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரோகினி தியேட்டருக்கு ஜெய்லர் படம் பார்க்க சென்றுள்ளார். இருவரும் தியேட்டரில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்து படத்தை பார்த்தார்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.