ரஜினிகாந்த் சமரசம்: தனுஷ் – ஐஸ்வர்யா சேர்ந்து வாழ முடிவு – வைரலாகும் ரொமான்டிக் வீடியோ..!
Author: Vignesh7 October 2022, 9:27 am
பிரபல நடிகர் ரஜினி காந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி காந்த் திரைப்பட வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இருகுடும்பத்தினரின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாக சமுக வலைதளங்களில் தகவல் பரவியது.
மேலும், இவர்கள் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விவாகரத்து ரத்து என செய்திகள் வெளியாக துவங்கிய பின் தனுஷ் – ஐஸ்வர்யாவின் பழைய ரொமான்டிக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Time to Reshare this.. ❣️#AishwaryaRajinikanth back to #AishwaryaDhanush 🙌#D #Dhanush pic.twitter.com/KkH7aQJHq9
— VCD (@VCDtweets) October 5, 2022