+12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த தனுஷ் மகன்.. – ஐஸ்வர்யாவுக்கு பெருமை சேர்த்த யாத்ரா..!

Author: Vignesh
7 May 2024, 6:52 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

dhanush - updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க: ஒரேயடியா ஏறுதே.. கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தனர். பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று புகைப்படங்களுடன் வெளியானது. மகள் மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் விவகாரத்து கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

aishwarya - updatenews360

மேலும் படிக்க: நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்? PERSONAL விஷயங்களை பகிர்ந்த பாவனா..!

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் தனுஷின் மூத்த மகன் யாத்ரா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 569 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாராம். இதனால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே செம சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். அதன்படி, மொழிப்பாடத்தில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் எடுத்துள்ள யாத்ரா. ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91 மதிப்பெண், வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்ணும் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?