ரஜினிக்கு என்ன ஆச்சு…? அவசர அவசரமா இணைந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யா – தனுஷ்!

Author:
18 October 2024, 10:44 am

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம்வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் திரைப்பட தயாரிப்பாளர் , பின்னணி பாடகர் , திரைப்பட நடிகர் , திரைப்பட ஆசிரியர், திரைப்பட இயக்குனர் இப்படி பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார். தனுஷ் முதல் திரைப்படத்தில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

saranya ponvanan

இதனால் சினிமாவை வேண்டாம் சினிமாவை விட்டு ஓடி விட வேண்டும் என முடிவெடுத்த தனுஷுக்கு அவரது அண்ணன் செல்வராகவன் விடவில்லை. தொடர்ந்து அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தார் செல்வராகவன் .

அப்படித்தான் தேவதை கண்டேன், புதுப்பேட்டை. உள்ளிட்ட திரைப்படங்களில் தனுஷை மிகச் சிறந்த நடிகராக மாற்றினார். தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர ஹீரோக்களில் ஒருவராக நடிகர் தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

dhanush-aishwarya

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் பல வருட வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் விவாகரத்து செய்து. பிரிந்து வாழ்ந்த வாழ போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்கள் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வரும் இந்த ஜோடி மீண்டும் இணைய போவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சுபைர் தனியார் YouTube சேனல் உடலுக்கு பேட்டி கொடுத்தபோது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசினார். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி நிறைய முயற்சிகள் எடுத்திருக்கார் .

மேலும், இரு தரப்பினரின் குடும்பங்களும் பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால், அப்போது அவர்கள் செய்த முயற்சிகள் ஏதும் பலன் அளிக்கவில்லை. இப்படி ஒரு சமயத்தில் இருவரின் மனதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான முடிவில் இருக்கிறார்கள். இவர்கள் இணைவதற்கு அவர்களது மகன்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் மிக முக்கியமாக மிக முக்கியமான காரணம் ரஜினி தான் என கூறப்படுகிறது.

Rajini

இதையும் படியுங்கள் : நயன்தாராவுக்கு கோபம் வந்தால் இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்வாரா?

அதாவது ரஜினி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால் அவரின் மன நிம்மதிக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடைசி காலத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்தால் அவர் நிம்மதியாக இருப்பார் சந்தோஷமாக இருப்பார் என கூறி சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்த தகவல் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!