‘தனுஷ் – ஐஸ்வர்யா’ குறித்து வெளியாகும் அனைத்து தகவல்களும் பொய்… உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்..!

Author: Vignesh
8 October 2022, 6:12 pm

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு,
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்தது.

அனைவராலும் விரும்பப்பட்ட நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் அறிவித்த ஸ்டைலிலேயே ஐஸ்வர்யாவும் தனுசும் தங்களுடைய முடிவை அறிவித்தனர்.

aishwarya rajinikanth_UpdateNews360


இருகுடும்பத்தினரின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், இவர்கள் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விவாகரத்து தொடர்பாகப் பரவிய செய்தி குறித்துப் பேசியுள்ளார். அதாவது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் எனவும், சந்தேகப்பட்டால் கூட அதை பெரிதுபடுத்தாமல் இருந்தால், அது சரியாகிவிடும் என்று விட்டுவிட வேண்டும் எனவும், அப்படிப்பட்ட நிலையில் தான் தனுசும் ஐஸ்வர்யாவும் கோபத்தில் விவாகரத்து முடிவை எடுத்துப் பிரிந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

aishwarya rajinikanth_UpdateNews360

அப்பா மீதும் அம்மா மீதும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பாசம் அதிகம் எனவும், சமீபத்தில் அவர்களின் மூத்த மகனுக்கு அவர் படிக்கும் பள்ளியில் முக்கிய பொறுப்பு ஒன்று கொடுத்ததற்கு, தனுசும் ஐஸ்வர்யாவும் பங்கேற்றபோதே மீண்டும் இணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது என பயில்வான் தெரிவித்துள்ளார்.

தனுசும் ஐஸ்வர்யாவும் ஒன்றாகச் சேர்வார்கள் என்று முன்னதாகவே தான் கூறியிருந்ததாகவும், சமீபத்தில் சில செய்திகளில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து கேஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது அனைத்தும் பச்சை பொய் என பயில்வான் தெரிவித்தார்.

aishwarya rajinikanth_UpdateNews360

தனுசும் ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்திற்கே செல்லவில்லை எனவும், நீதிமன்றத்தை நாடியிருந்தால் நிச்சயம் வெளியில் தெரிந்திருக்கும்.

இருவரும் ஒரே ஹோட்டலில் இருந்து பிரிவதாக டிவிட்டரில் அறிவித்தார்கள். இதுவரை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு செல்லவில்லை எனவும், உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்தார்கள் தற்போது உணர்ச்சிப் பூர்வமாக இணைகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஒரு தந்தையாக விட்டுப்பிடித்தார் என்றும் அவர் அவரின் கடமையைச் செய்ததாகவும், இந்த சமூகம் நம் குழந்தைகளை எப்படிப் பார்க்கும் என்பது ஐஸ்வர்யாவுக்கும் தனுசுக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார் பயில்வான்.

aishwarya rajinikanth_UpdateNews360

இருவருமே படித்தவர்கள், இருவருக்குமே குடும்ப பாசம் தெரியும். குழந்தைகள் மனதிலிருந்த வடு காயமாவதைத் தடுத்துவிட்டார்கள் ஐஸ்வர்யாவும் தனுசும். நல்ல நடிகரான தனுஷ், நல்ல அப்பா, நல்ல கணவர், நல்ல மருமகன் என்ற பெயரையும் எடுப்பார் என்பது உறுதி என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 444

    0

    0