தனுஷ் உடன் போட்டி போட்டு ஐஸ்வர்யா செய்த செயல்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மகன்கள்..!
Author: Vignesh29 January 2024, 11:00 am
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. கேப்டன் மில்லர் பட விழாவில் தனுஷ் இரண்டு மகன்களையும் அருகில் அமரவைத்து இருந்த நிலையில், அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் பட விழாவில் செய்திருக்கிறார்.