விவாகரத்து முடிவு வாபஸ்.. சமரசம் செய்து வைத்த ரஜினி.. மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா?..

Author: Vignesh
28 March 2024, 2:05 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

Aishwarya Dhanush - Updatenews360

எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தனர். பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று புகைப்படங்களுடன் வெளியானது. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்து இருப்பதாக திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், மகள் மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 238

    0

    0