முறிந்தது தனுஷ் – ஐஸ்வர்யா 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை.. குழந்தைகள் யாரிடம் இருப்பார்கள்..? இந்த வயதில் இதையெல்லாம் தாங்குவாரா ரஜினி..!
Author: Vignesh3 December 2022, 11:00 am
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும் அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனுசை போயஸ் கார்டனில் வீடு கட்டுமாறு கூறினார். தன்னுடைய மாமாவே கூறிவிட்டார் என எண்ணி தனுஷும் போயஸ் கார்டனில் பங்களாவை கட்ட தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினி பேரன்கள் தன் முன்னே இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள்.
இதனை கேள்விப்பட்டா ரஜினி மகளையும் மருமகனையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடலாம் என பலமுறை பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார் ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. பேரன்களை அடிக்கடி பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த ரஜினிக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது ஏனென்றால் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யா திரும்ப வீட்டிற்கு வந்து விட்டார். மகளின் இந்த முடிவால் ரஜினி நிம்மதியை இழந்தார்.
இருந்தாலும் ஐஸ்வர்யாவிடம் தனுசுடன் சேர்ந்து வாழ வேண்டுமென பேசினார் அப்பொழுது அவர் சரி என அறிவித்தார் இந்த நிலையில் அவர்களின் திருமண நாள் அன்று கண்டிப்பாக இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆயிரம் தான் மகன்கள் மீது பாசம் இருந்தாலும் இப்படி தனியாக சுற்றித் திரிவது தான் சுதந்திரமாக இருப்பதாக தன்னுடைய தந்தை கஸ்தூரிராஜாவிடம் தனுஷ் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது கணவரை விவாகரத்து செய்த பொழுது தனக்கும் விவாகரத்து வேண்டும் என ரஜினியிடம் ஐஸ்வர்யா அடம்பிடித்ததாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் அதற்கு ரஜினி திட்டி உங்களுக்கு இது என்ன விளையாட்டா உங்களுடைய சந்தோசம் தான் முக்கியமா என்று பேசி அந்த மூடிவை கைவிட்டு விட்டார். அதேபோல் தற்பொழுதும் தன்னுடைய பேரனான யாத்ரா மற்றும் லிங்காவை காரணம் காட்டி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கலாம் என முயற்சி செய்துள்ளார் ரஜினி.
ஆனால் தற்பொழுது இருவருமே ரஜினியின் பேச்சை சுத்தமாக கேட்கவில்லையாம் பிள்ளைகள் விஷயத்தில் சமாதானமாக இருக்கிறோம் என்றும் ஆனால் மீண்டும் சேர்வது பற்றி எந்த ஒரு பேச்சும் பேசக்கூடாது என இருவரும் முடிவு செய்துள்ளார்கள் அதேபோல் ஐஸ்வர்யா தனுஷ் பிரிந்த பிறகு தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியவர்களை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ரஜினியும் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தன்னுடைய பிள்ளைகள் வளரும் வரை அமைதியாக இருந்த ஐஸ்வர்யா தனுஷ் தற்பொழுது மீண்டும் படத்தை இயக்க ஆரம்பித்துள்ளதால் இனி சினிமாவில் ஐஸ்வர்யாவுக்கு சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரஜினி மற்றும் ஐஸ்வர்யா, தனுஷ் தரப்பில் இருந்தும் எந்தஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. சமூகவலைதளங்களில் மட்டுமே இந்த தகவல் வெளியாகி கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், இருவரும் விவாகரத்து பெற்றால், இவர்களின் குழந்தைகள் யார் கஷ்டடியில் இருக்கும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து குடும்ப நல வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், இந்தியாவில் குழந்தைகள் மீதான கஸ்டடி உரிமை அம்மா, அப்பா இருவருக்கும் சமமாகவே உள்ளது.
குழந்தைகள் 9 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்கள் அம்மாவின் கஷ்டடியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒருவேளை அந்த குழந்தைக்கு வயது 9 வயதிற்கு மேல் ஆகியிருந்தால், குழந்தைகளிடம் கருத்து கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.