“ஒரே இடத்தில் தனுஷ், ஐஸ்வர்யா.” மீண்டும் இணைவது குறித்து அறிவிப்பு..?

Author: Rajesh
23 January 2022, 4:14 pm

சில நாட்களுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்தனர். அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஹைதராபாத்தில் பிரபல ஹோட்டலில் தங்கியுள்ளார். அதைப்போல் ஐஸ்வர்யாவும் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஹோட்டலில் தான் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை.
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நான் சில அறிவுரைகளை கூறி இருப்பதாக தெரிவித்தார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!