மெகா ஹிட் இயக்குனருடன் இணைந்த தனுஷ் – ஹீரோயின் யார் தெரியுமா? பக்கா மாஸ் அப்டேட்!

Author: Rajesh
18 January 2024, 2:48 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ் கூட்டணியுடன் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ். ஆம், தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் இயக்குனராக பார்க்கப்படும் சேகர் கம்முலா உடன் தனுஷ் கூட்டணி வைத்துள்ளார். சேகர் கம்முலா ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நகர்ச்சுனா நடிக்கவுள்ளார். 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜா உடன் தொடங்கியுள்ளது.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 428

    0

    0