சுச்சி லீக்ஸ் குறித்து கேட்ட ஒற்றை கேள்வி.. பதில் சொல்லாமல் கடுப்பாகி வெளியேறிய தனுஷ்..!! (வீடியோ)

Author: Vignesh
21 February 2023, 12:43 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

Aishwarya Dhanush - Updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

இருவரும் பிரிந்த நிலையில், தனுஷின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை ஏதாவது ஒரு வகையில் நினைவுபடுத்தும் விதமாக அமைந்து வருகிறது.

aishwarya dhanush - updatenews360

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, அப்படத்தின் பாடலை பாடி அசத்தினார் தனுஷ். பிறகு, ரசிகர்களிடம் பேசிய அவர், “எனக்காக இங்கு வந்திருக்கும் உங்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால், பாடல் வேண்டுமானால் பாடுகிறேன்,” எனக் கூறினார்.

இதனால், ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அவர் இதற்கு முந்தைய படமான திருச்சிற்றம்பலத்தில், ‘நிஜமா நான் செய்த பாவம்,’ என்ற பாடலை பாடி மீண்டும் முனுமுனுப்புகளை உருவாக்கியுள்ளார்.

lal-salaam - updatenews360

விஷுனு விஷால் வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கயிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகுவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் படத்தில் இருந்து பல பேர் விலகியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து விலகி, நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதனால் ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பல நடிகர் நடிகைகளின் பிரைவேட் வீடியோ மற்றும் புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளிவந்த நிலையில், படுவைரல் ஆனது. இந்த சுச்சி லீக்ஸ் பிரச்சனையில் நடிகர் தனுஷ் கூட மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் தனுஷிடம் கேள்வி கேட்டப்பட்டது.

dhanush - updatenews360

முதலில் அமைதியாக இருந்த தனுஷ், தொகுப்பாளினி அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டுக்கொண்டே போனதால் கடுப்பாகி பேட்டியில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 625

    1

    0