5 நாட்களில் அபார சாதனை படைத்த “கேப்டன் மில்லர்” – எத்தனை கோடி தெரியுமா?
Author: Rajesh17 January 2024, 6:27 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ நடித்துள்ளார். இப்படம் இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகியது. இதில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகிய இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூபாய் 55 கோடி வசூல் செய்து ஆபார சாதனை படைத்துள்ளது. மேலும், வரும் நாட்களில் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த தகவல் தனுஷின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.