தனுஷின் “கேப்டன் மில்லர்” படம் எப்படி இருக்கு….? முதல் விமர்சனம் இதோ!

Author: Rajesh
10 January 2024, 12:07 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பின்னர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்தது.

குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. ட்ரைலரில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருந்தது. அந்த ட்ரைலர் நம்பர் ஒன் ட்ரண்ட் ஆனதை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் “கொம்பரி வேட்டபுலி” என்ற ரொமான்டிக் லிரிகள் பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகப்போகும் இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்சார் போர்டு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு, “கேப்டன் மில்லர் பைசா வசூல் திரைப்படம். எப்போதும் போல் தனுஷ் இந்தியாவில் “பன்முகத்திறன் மன்னன்”. மிரட்டியெடுத்துவிட்டார் என கூறி 3.5/5 என மதிப்பெண் கொடுத்துள்ளார்” அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக தனுஷ் ரசிகர்கள் படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 489

    0

    0